திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்ட விழா

நாகை மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

Update: 2024-04-22 09:38 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80-வது சிவத்தலமாகும்.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.தொடர்ந்து நேற்று பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திருப்புகலூர் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் செயல் அலுவலர் அசோக்ராஜா,தக்கார் தனலெட்சுமி,கணக்கர் சீனிவாசன், திருப்பணி குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News