சென்னை-நெல்லை சிறப்பு ரயில் நடுவழியில் நிறுத்தம்.
சென்னை-நெல்லை சிறப்பு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது
சென்னை எக்மோரில் இருந்து நெல்லை நோக்கி பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மாலை 5.15 மணிக்கு விக்கிரவாண்டி ரெயில் நிலையத்துக்கும், முண்டியம்பாக் கம் ரெயில் நிலையத்துக்கும் இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது பயணி ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டார். உடனே டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தி னார். இதையடுத்து கடைசி பெட்டியில் இருந்த ரெயில்வே ஊழியர் பெட்டி பெட்டியாக வந்து பயணிகளிடம் ரெயிலை நிறுத்தியது யார்? என விசாரணை நடத்தினார். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரெயிலை நிறுத்திய நபர் யார்? என தெரியவில்லை. அதன்பிறகு 10 நிமிடம் கழித்து அந்த ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. மேலும் ரெயிலை நிறுத்திய நபர் குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.