நாமக்கல்லில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
நாமக்கல்லில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலை, கொங்கு திருமண மண்டபத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு 1,646 பயனாளிகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் நகர்மன்ற தலைவர்கள் து.கலாநிதி (நாமக்கல்), முனைவர் கவிதா சங்கர் (இராசிபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் க.பா.அருளரசு, வருவாய் கோட்டாட்சியர்கள் (நாமக்கல்) மா.க.சரவணன், சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், உதவி ஆணையர் கலால் எம்.புகழேந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கே.இராமசந்திரன், இணை இயக்குநர் வேளாண்மை எஸ்.துரைசாமி துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.