குழந்தை கடத்தல் வதந்தி - மாவட்ட எஸ்பி எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தல் பற்றி சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
Update: 2024-03-08 06:17 GMT
எஸ்பி பிரதீப்
பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குழந்தைகள் கடத்தல் பற்றி சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் நடைபெறவில்லை. தவறான தகவல் பரப்பிய இருவரை ஏற்கனவே கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.