மின்இணைப்பு பெறுவது தொடர்பாக மோதல்: ஏழு பேர் காயம்
மின் இணைப்பு பெறுவது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
. கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பிபாடி அருகே உள்ள டீ பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மனைவி வனிதா வயது 39. இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வருபவர் மாரியப்பன் மகன் சுரேஷ். இவர்கள் இருவரது வீட்டிற்கும் இடையே பொதுப் பாதை உள்ளது.
பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இரு குடும்பத்தாரிடையே முன் விரோதமும் இருந்து வந்துள்ளது. இதனுடைய வனிதா நவம்பர் 25ஆம் தேதி காலை தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக இரும்பு குழாய்களை பொது பாதையில் பதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனை சுரேஷ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினர் இடையே வாய் சண்டை ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இந்த சம்பவத்தில் சுரேஷின் தந்தை மாரியப்பன் மாரியப்பனின் சகோதரர் நல்லசாமி, நல்லசாமி மனைவி மல்லிகா இவர்கள் நான்கு பேரும் மனிதாபி தகாத வார்த்தை பேசியும், காலணி அணிந்த காலால் உதைத்தும், கற்களால் தாக்கியும் துன்புறுத்தியும் உள்ளனர். அதேசமயம் வனிதாவின் கணவர் மற்றும் கணவரின் தாயார் ஆகியோர் மிளகாய் பொடியை தூவி எதிர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். இது தொடர்பாக வனிதா அளித்த புகாரின் பேரில் சுரேஸ், நல்லசாமி, மாரியப்பன், மல்லிகா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே சம்பவத்தில் நல்லசாமி அளித்த புகாரின் பேரில் வனிதா, அவரது கணவர் சந்திரசேகரன், சந்திரசேகரன் தாயார் பழனியம்மாள் ஆகிய மூன்று பேர் மீதும் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.