ஆரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Update: 2023-12-19 07:21 GMT

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலைமாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி அனைவரையும் வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ்.தரணி வேந்தன், வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதல் கட்டமாக ஆரணி நகராட்சிக்குட்பட்ட 12முதல் 17 வரையான 5 வார்டுகள் பொது மக்களுக்கான மனுக்கள் பெறப்பட்டன. மேலும் இந்த முகாமில் மின்சார துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி துறை காவல் துறை அலுவலர்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மாற்று திறனாளிகள் துறை சமுக நலம் மகளிர் உரிமை துறை ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டுறவு துறை உள்ளிட்ட துறைகள் மூலம் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு குறிப்பிட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.இதனையடுத்து உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பயனாளிகளிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்: மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது 30நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேலும் இந்த திட்டத்தை நிரந்தரமாக்கி பொது மக்களுக்கு சேவை வழங்கவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தைதொடங்கியுள்ளார். மேலும் அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திஇந்த திட்டத்தில் பயனடைய வழிவகுக்க வேண்டும் என்று கூறினார். இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் புதிய மின் இணைப்பு மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாறுதல், வாரிசு சான்று சாதிச் சான்று வருமானச் சான்று முதியோர் உதவி தொகை, மாற்று திறனாளி உதவித்தொகை, சொத்து வரி, குடிநீர், பெயர் மாற்றம், உள்ளிட்ட 310 மனுக்கள் பெறப்பட்டு 15 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன் சுந்தர் நகர மன்ற உறுப்பினர்கள் பழனி, ரவி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் அப்சல் பாஷா, துணை சேர்மன் ராஜேந்திரன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கப்பல் கங்காதரன், நகராட்சி ஆணையர் குமரன் நகராட்சி பொறியாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வட்டாட்சியர் மஞ்சுளா நன்றி கூறினார்.

Tags:    

Similar News