சிவகளையில் தாயுமானவன் திட்டத்தில் பொருளாதார நிலையை ஆட்சியர் ஆய்வு
சிவகளை ஊராட்சியில் தாயுமானவன் திட்டத்தில் மக்கள் நிலை ஆய்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் தாயுமானவன் திட்டத்தில் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் சிவகளை ஊராட்சியில் மக்கள் நிலை ஆய்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள விளிம்புநிலை மக்களை கண்டறிந்து அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளையும் மக்கள் நிலை ஆய்வில் சமூக வரைபடம் வரையும் பணிகளையும் பார்வையிட்டு தெரிவித்ததாவது: தாயுமானவன் திட்டத்தில் பொருளாதார நிலை ஆய்வு செய்ய மிகவும் ஏழை பட்டியலில் வீடற்றோர்,
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர், மண் சுவற்றுடன் கூடிய ஒரு அறை உள்ள குடிசை வீடுகள், பழங்குடியினர் (இருளர் காடர் நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள் உள்ளிட்ட பழங்குடியினர்), திருநங்கைகள், ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதிர்கன்னிகள், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர்,
ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற முதியோர் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்), ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்கள் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (காசநோய், இருதய நோய் யானைக்கால் வலிப்பு புற்றுநோய், எச்ஐவி எய்ட்ஸ் போன்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள்), சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் ஆகியோரும், ஏழை பட்டியலில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 1.20 இலட்சத்திற்கு குறைவாக உள்ள குடும்பங்கள், இரண்டு அறைகள் உள்ள குடிசை / அஸ்பெஸ்டாஸ் வீட்டில் உள்ள குடும்பங்கள்,
அரசு திட்டத்தினால் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கும் குடும்பங்கள், சொந்தமாக நன்செய் ஒரு ஏக்கருக்கு குறைவாக, புன்செய் நிலங்கள் இரண்டு எக்கருக்கு குறைவாக. வைத்துள்ள குடும்பங்கள், நலிவுற்ற பாரம்பரிய தொழில் செய்யும் குடும்பங்கள், குத்தகை நிலங்களில் விவசாயம் செய்யும் குடும்பங்கள், கால்நடைகளையே முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ள குடும்பங்கள் அதிகபட்சமாக 2 ஆடுகள் அல்லது 1 மாடு வைத்துள்ள குடும்பங்கள், வாழ்வாதாரத்திற்காக இரண்டு / மூன்று சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்,
மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் பார்வையற்றோர், பார்வை குறைபாடு உடையவர்கள், தொழு நோயின் காரணமாக உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடு உடையோர், தானாக இயங்க இயலாதோர், குள்ளத்தன்மை உடையோர், அறிவுசார் குறைபாடு உடையோர், மனநோயுள்ளோர், ஆட்டிசம்; நிற மாலைக் கோளாறு உள்ளோர், பெருமூளை வாதம் உடையோர், தசைநார் தேய்வு, நாள்பட்ட நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள், குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள், தண்டுவட மரப்பு நோய் உள்ளவர்கள், இரத்த அழிவு சோகை உள்ளவர்கள்,
இரத்த உறைதல் குறைபாடு உடையோர், அரிவாள் உயிரணு சோகை உள்ளவர்கள், காதுகேளாத குருட்டுத்தன்மை உட்பட பல குறைபாடுகள் உடையோர், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறன் 40 சதவீதம் உடைய தேசிய அடையாள அட்டை உள்ளவர்கள், UDID அடையாள அட்டை உள்ளவர்கள், அடையாள அட்டை இல்லாத மாற்றுத் திறனாளிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் சிவகளையில் அகழாய்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக நெடுஞ்சாலைத்துறை - நபார்டு மற்றும் கிராம வங்கி மூலம் ரூ.1487 இலட்சம் மதிப்பீட்டில் கோரம்பள்ளம் கண்மாய் வழியாக காலாங்கரை மற்றும் முத்தையாபுரம் சாலை குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்க்கான பணிகள் நடைபெற்று வருவதையும், கோரம்பள்ளம் கண்மாயின் 2ஆம் மடையையும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் பாலமுருகன், திட்ட இயக்குநர்( மகளிர் திட்டம்) மல்லிகா, திட்ட அலுவலர் வாழ்ந்துகாட்டுவோம் தாமோதரன், ஏரல் வட்டாட்சியர் கோபால், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்ள் அருள்பிரசாத், முருகன், கிருஷ்ணகுமார், கனகராஜ், சிவகளை ஊராட்சிமன்றத் தலைவர் பிரதிபா மற்றும் அரசு அலுவலர்கள்,
விவசாய சங்க பிரதிநிதிகள், நீர்பாசன சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.