குரூப் 4 தேர்வு மையத்தை ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தொகுதி-IV (Group-IV) க்கான எழுத்து தேர்வு மையத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தொகுதி-IV (Group-IV) க்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 31,483 நபர்கள் தேர்வு எழுதினர் 9,736 நபர்கள் (ABSENT) தேர்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV (Group-IV) க்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV (Group-IV) க்கான எழுத்துத்தேர்வு மாவட்டத்தின் 8 வட்டங்களில், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 44 தேர்வு மையங்கள், அஞ்செட்டி வட்டத்தில் உள்ள 2 தேர்வு மையங்கள், பர்கூர் வட்டத்தில் உள்ள 9 தேர்வு மையங்கள், ஒசூர் வட்டத்தில் உள்ள 31 தேர்வு மையங்கள், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 21 தேர்வு மையங்கள், சூளகிரி வட்டத்தில் உள்ள 4 தேர்வு மையங்கள், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள 4 தேர்வு மையங்கள் மற்றும் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள 16 தேர்வு மையங்கள் என மொத்தம் 131 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-IV (Group-IV) க்கான எழுத்துத்தேர்வு 41,219 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 31,483 நபர்கள் தேர்வு எழுதினர். 9,736 நபர்கள் (ABSENT) தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வினை கண்காணிக்க 8 வட்டங்களுக்கு துணை ஆட்சியர்களும், 16 பறக்கும் படைகளும், 38 நடமாடும் அலகுகள், 131 மையங்களில் 131 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு மையங்களை வீடியோ பதிவு செய்ய நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, என அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.