கால்நடை மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
சூளகிரி பகுதியில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமில் காமன்தொட்டி கால்நடை மருத்துமனையில் கோமாரி நோய் தடுப்பு குறித்த பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் சரயு ஆய்வு செய்தார்.
Update: 2024-02-02 08:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், காமன்தொட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனையில் அமைந்துள்ள மருந்தகத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு திட்டபணிகளை பார்வையிட்டு கால்நடை தடுப்பூசி, கோமாரி நோய் தடுப்பு பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.