மாற்றுத்திறனாளிகளுக்கு நிதிஉதவி வழங்கிய ஆட்சியர்

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் நிதிஉதவி வழங்கினார்.

Update: 2024-06-25 07:06 GMT

தென்காசியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் நிதிஉதவி வழங்கினார்.


தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக வழங்கினர். முக்கிய நிகழ்வாக மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் அடைந்த 17 மாற்றுத் திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News