போளூரில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அ.ராஜேந்திரன் நினைவேந்தல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி திமுக சார்பில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ அ.ராஜேந்திரன் நினைவேந்தல் நினைவு புகழஞ்சலியும், படத்திறப்பு விழாவும் போளூர் ராணி மகாலில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.சேகரன், பொதுக்குழு உறுப்பினர் எ.எம்.காசி, ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.நரேஷ்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என். கே.பாபு, நகர செயலாளர் கோ.தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். படத்தை திறந்து வைத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரனின் படத்தை திறந்து வைப்போம் என எண்ணியதில்லை. மனிதன் பிறந்து உலகில் புகழோடு வாழவேண்டும் என வள்ளுவன் சொன்னது போல் வாழ்ந்து காட்டினார். போளூர் தொகுதியில் பலரை உருவாக்கியவர். திமுகவினருக்கு உற்றதுணையாக விளங்கினார். அரசியல் வாழ்க்கையில் மிகசிறந்த பணியாற்றினார். 3 தலைமுறை அரசியல்வாதி. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பாலமாக இருந்தவர். இப்போது படமாக இருக்கிறார். குறைகுடம் தழும்பும். நிறைகுடம் எப்போது தழும்பாது. பெருமையின் சிகரம். பண்புடன் நிறைந்து வாழ்ந்தவர். பலநேரங்களில் திமுகவினருக்கு ஆலோசனை தருபவர். ஒரு பணியை எடுத்து கொண்டால் கடைசி வரை எடுத்து முடிப்பவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் வந்தார். இயற்கையை பொறுப்பேற்க முடியாது. போளூர் தொகுதி திமுகவினரை காப்பாற்றியவர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். சிறுபான்மை இனத்தவர் என்றாலும் எல்லாராலும் பாராட்டு பெற்றவர். திமுக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். போளூரில் கலைஞர் மாளிகை கட்டியவர், கலைஞர் சிலை அமைய பாடுப்பட்டவர். இவரை போளூர் தொகுதி மட்டுமல்ல, திருவண்ணாமலை மாவட்டமே என்றும் நினைவில் வைத்து கொள்ளும். அவர் செய்த பணிகளை என்றும் திமுகவினர் போற்றுவார்கள். அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என பேசினார். இதில் சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவ அணி துணை தலைவர் எ.வ.வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் பெ.சு.தி சரவணன், மு.பெ.கிரி, ஓ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் அ.மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பெ மனோகரன்,அ.எழில்மாறன்,எம். டி.மனோகரன், க.சுப்ரமணியன் அ.சிவக்குமார், நகர செயலாளர்கள் ரா.முருகன், வே.வெங்கடேசன், பேருராட்சி தலைவர்கள் ச.ராணிசண்முகம், கே.டி.ஆர்.பழனி, மாவட்ட பிரதிநிதிகள் க.சையத் அப்ரோஸ், ப.சங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தே.மாலினி வினோத்திவாகரன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் சி.ராம்மோகன், ஜெ.பழனி, எ.எஸ். ஹயாத்பாஷா, பி.கே.ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் சாது ஆனந்த்,எம்.பார்த்தீபன், ஏ.சரவணன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை போளூர் ஒன்றிய நகர திமுகவினர் செய்தனர்.