கெங்கவல்லி துணை பிடிஓ மீது புகார்: ஆஜராக கடிதம்
கெங்கவல்லி துணை பிடிஓ மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 3ஆம் தேதி ஆஜராக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-01 13:32 GMT
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பத்து ரூபாய் இயக்கத்தின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலர் பிரபு. இவர் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணிபுரியும் துணை பி.டி.ஓ., சத்யா(பொது) முறைகேட்டில் ஈடுபட்டதாக, கவர்னர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனித்தனியே புகார் அனுப்பினார்.
இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க, ஆத்துார் பி.டி.ஓ.,வுக்கு (கி.ஊ.,), கலெக்டர் கார்மேகம் உத்தரவு விட்டார். அதன்படி விசாரணைமேற்கொள்ள, ஜன., 3 தேதி 11:00 மணிக்கு, ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆஜராகும்படி, மனுதாரருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.