சமூக நீதிக்கான கலந்தாய்வு கூட்டம்

Update: 2023-11-19 11:52 GMT

சமூக நீதிக்கான கலந்தாய்வு கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்து சாரதா தொடங்கிவைத்தாா்.

மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெ.மோகனா, முதன்மை சாா்பு நீதிபதி எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக நிலுவையில் இருந்த 31 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 29 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ.5.47 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News