மாமல்லபுரத்தில் அரசியலமைப்பு கருத்தரங்கம்

மாமல்லபுரத்தில் அரசியலமைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-02-16 16:10 GMT
மாமல்லபுரத்தில் அரசியலமைப்பு கருத்தரங்கம்

தமிழக காங்கிரசின் வழக்கறிஞர் பிரிவு சார்பில், அரசியலமைப்பு கருத்தரங்கம், மாமல்லபுரம் அடுத்த கிருஷ்ணன்காரணை தனியார் விடுதியில், அப்பிரிவின் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நேற்று துவங்கியது.

இதில், தமிழக காங். , கட்சி தலைவர் அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் கட்சி தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் அழகிரி பேசியதாவது:காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களிலும், மாநில கட்சிகளுடன் போட்டியிட்டு, பல பிரச்னைகளை சந்தித்துள்ளது.

அவர்களிடம் தோல்வி அடைந்துள்ளது; வெற்றியும் பெற்றுள்ளது. ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக, நாம் கூட்டணியில் இணைகிறோம். பெரும்பாலானவை தீர்விற்கு வந்த பின், அதுகுறித்து விமர்சிப்பது, எதிராக செயல்படுவது, பழைய கதைகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவது ஆரோக்கியமான அரசியல் கட்சிக்கு ஏற்புடையதல்ல.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News