நெல்லையில் கட்டிட தொழிலாளி பைக் திருட்டு
நெல்லையில் கட்டிட தொழிலாளி பைக் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 10:20 GMT
மாவட்ட எஸ்பி அலுவலகம்
கடையநல்லூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி லூர்து மனைவி உடல் நலம் சரி இல்லாததால் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றிரவு மருத்துவமனை எதிரே உள்ள டீக்கடையில் பைக்கை நிறுத்தி இருந்தபொழுது பைக்கை காணவில்லை. இது குறித்து புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.