சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி சாவு
போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தினேஷ்குமார், சென்ற டூவீலர் மீது லாரி மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Update: 2024-05-30 04:02 GMT
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று தினேஷ்குமார், அவருடைய தாய் அங்கம்மாள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலம் பள்ளப்பட்டியில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். உத்தமசோழபுரம் சூளைமேடு பிரிவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தாயும், மகனும் படுகாயம் அடைந்தனர். இருவருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தினேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.