ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

சிவகங்கையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-01-13 12:31 GMT

சிவகங்கையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், பொங்கல் விழாவினை முன்னிட்டு, நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு / வடமாடு / மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, விழாவை சிறப்பாக நடத்திட, ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையுள்ள காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்கள் அரசாணை எண். 7, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும், மீன்வளத்துறை, (AH3) நாள்: 21.01.2017-ல் உள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதி வழங்கப்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. அரசாணையில் அனுமதி வழங்கப்பட்ட (ஜனவரி -2024 முதல் மே 2024 மாதம் வரை) காலங்கள் தவிர பிற நாட்களில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு விழாக்கள் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அரசு அனுமதித்துள்ள (ஜனவரி-2024 முதல் மே 2024 மாதம் வரை) காலங்களில் அரசு அனுமதியின்றி நடைபெறும் ஜல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொருத்தப்பட வேண்டும். வடமாடு மஞ்சுவிரட்டுக்கு ஒரு காளைக்கு அனுமதிக்கப்பட்ட கால நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் கால்நடைத்துறையினரின் வழிகாட்டுதலின்படி ஆன்லைன் மூலமாகவே முன் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும், ஜல்லிக்கட்டு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறுவதை கண்காணித்திட ஏதுவாக வருவாய்த்துறை / கால்நடைத்துறை / காவல்துறை / மருத்துவத்துறை / பொதுப்பணித்துறை / தீயணைப்புத்துறை / போக்குவரத்துத்துறை / ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறையினா;கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி இணையவழி (Online) மூலமாக www.jallikattu.tn.gov.in என்ற இணைய தளத்தில் sign up என்ற Menu கீழ் 30 நாட்களுக்கு முன்னதாக கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யப்பட்ட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மனுதாரின் கோரிக்கை மனு, 50 ரூபாய்க்கான உறுதிமொழி முத்திரை தாள் ஆவணம், ரூபாய் ஒரு கோடிக்கான காப்பீட்டுத்தொகை ஆவணம், முந்தைய ஆண்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றமைக்கான அரசாணை, ஜல்லிக்கட்டு நடைபெறும் தளத்தின் புலப்படம், CCTV கேமரா ஜல்லிக்கட்டு தளத்தில் அமைக்கப்பட்டதற்கான புகைப்படம் இணைய தளத்தில் விண்ணப்பம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 10.01.2024 அன்று, ஜல்லிக்கட்டு / வடமாடு / மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைமுழுமையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு / வடமாடு / மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News