செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் எஸ்.எம். முனியாண்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கோடைகால குடிநீர் பிரச்சினை தீர்க்க நிதி ஒதுக்கியதற்காகவும், கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் குடிசை இல்லா கிராமங்களை உருவாக்க வும்,செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கியதற்கும்,கோடை காலங்களில் ஆடு மாடுகள் குடிநீருக்காக குளங்களை அமைப்பதற்கு பணி ஆணை வழங்கியதற்காகவும் செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும்,வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்னும் முடியவில்லை.மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு பதவி காலம் முடிய உள்ளது.ஆகவே 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் பொழுது 9 மாவட்டங்களையும் கலைக்க வேண்டாம் என கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.ஒன்பது மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஐந்து ஆண்டுகள் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களில் 359 ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு அளித்து மாநில கூட்டமைப்பின் மூலம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் செங்கப்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஒத்துழைப்பு அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அச்சரப்பாக்கம்,மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், காட்டாங்குளத்தூர் ஒன்றியம்,திருப்போரூர் திருக்கழுக்குன்றம் ஆகிய 8 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிக் கூட்டமைப்பின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.