மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகள்
கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24x7 Website
Update: 2023-10-28 07:41 GMT
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கல்வாசல் கிராமத்தில், வசித்து வந்த வேலு வயது 85, என்பவர் வசித்துவந்தார், இவர் விவசாய கூலி வேலை செய்துவந்தார், இவருக்கு கண்ணம்மாள் வயது 77, என்ற மனைவியும் தேவிகா, ரேணுகா, என்ற இரு மகள்களும் குமார் என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்துவிட்டது வேலு வயதுமூப்பு மற்றும் உடல்நலம் சரியில்லாததால் 26/10/2023 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் காலமானார், இதனால் மனவருத்தத்தில் இருந்த அவரது மனைவி, கண்ணம்மாள் 27/10/2023 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் காலமானார். இவர்கள் இருவரையும் ஒன்றாக கல்வாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, அவர்கள் வாழ்விலும் இணைபிரியாத தம்பதிகள், மரணத்திலும் இணைபிரியாததை! கண்டு மக்கள் இரு உடல்களை கண்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.