நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா

நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 9 பேரிடம் 71 லட்சத்தை ஏமாற்றிய விருதுநகரைச் சேர்ந்த நபரின் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் இடுபபட்டனர்.

Update: 2023-12-21 09:14 GMT
நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 9 பேரிடம் 71 லட்சத்தை ஏமாற்றிய விருதுநகரைச் சேர்ந்த நபரின் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டம்...*

விருதுநகர் அருகே வேலுச்சாமி தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமி - சசி தம்பதியினர். கிருஷ்ணசாமி மல்லாங்கிணறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொழுநோய் பிரிவில் மேற்பார்வையாளராகவும், இவரது மனைவி சசி பாலவநத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் திருப்பூரை சேர்ந்த நாகேந்தினிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாகேந்திரன் மூலம் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கமுதியைச் சேர்ந்த தோப்பாடி முத்து மற்றும் விருதுநகரைச் சேர்ந்த 9 பேரிடம் கடந்த 2021ம் வருடம் 71 லட்சம் வசூலித்து அவர்களுக்கு அரசு போலி முத்திரையுடன் வேலைக்கான உத்திரவாத கடிதத்தினை தந்ததாக தெரிகிறது.

இது முற்றிலும் போலியென தெரிந்த பாதிக்கப்பட்ட நபர்கள் பல முறை அவர்களிடம் தங்களிடம் வாங்கிய பணத்தை திரும்பி தரும்படி கேட்டுள்ளனர். அவர்களும் தருவதாக கூறி இரண்டு வருடங்களாக இழுத்த தடித்ததாகவும், அவர்கள் சரியான முறையில் விளக்கம் தரவில்லை என்று கூறி ஊரகக் காவல்துறையிடம் புகார் மனுவினை அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஊரகக் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

இந்த விசாரணைக்கு இதுவரை கிருஷ்ணசாமி - சசி தம்பதியினர் முழு ஒத்துழைப்பு தரவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர்கள் விருதுநகர் அருகே வேல்சாமி நகரில் உள்ள அவர்ளின் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த ஊரகக் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News