குறுக்கே வந்த மான், திடீர் பிரேக் - ஓட்டுநர் பலி

திருமங்கலம் அருகே மான் குறுக்கே சென்றதால் திடீரென பிரேக் அடித்த லாரி மீது பின்னால் வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2023-12-31 05:24 GMT

விபத்துக்குள்ளான வாகனங்கள் 

விருதுநகரிலிருந்து மதுரை நோக்கி நேற்று அதிகாலை டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. பின்னால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து மதுரை பரவை மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஏற்றி செல்ல ஒரு மினி வேன் சென்றது. திருமங்கலம் சமத்துவபுரம் அருகே வந்தபோது நான்குவழிச்சாலையின் நடுவே திடீரென புள்ளிமான் ஒன்று சாலையை கடந்துள்ளது. இதனைக் கண்ட லாரி டிரைவர் மான் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பின்னால் சென்ற மினி வேன் ஓட்டுநரும் திடீரென வண்டியை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். ஆனால், வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்ற லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மினி வேனை ஓட்டி வந்தவர் தூத்துக்குடி நாங்கோடு பகுதியை சேர்ந்த இசக்கி மகன் சுடலைகண்ணன்(33) என்பது தெரியவந்தது. போலீஸார் சுடலைகண்ணனின் சடலத்தை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர்  மினிவேனை பொக்லைன் இயந்திரம் மூலமாக அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தினால் நான்குவழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News