சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி தங்கதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-02-20 02:49 GMT
விழிப்புணர்வு பேரணி 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, போன்ற பகுதிகளில் அண்மை காலமாக இணைய வழி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .இந்த நிகழ்வில் மாவட்ட எஸ். பி. தங்கதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சைபர் கிரைம் பிரிவு ஏ. டி. எஸ். பி சங்கு முன்னிலை வகித்தார். இப்பேரணியில், பொதுமக்கள் வங்கிகணக்கு எண் விவரங்களை சொல்லக் கூடாது. சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யகூடாது. உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 650க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News