ஏரியின் மதகு பழுது - வீணாகும் நீரால் பாசனத்திற்கு பாதிப்பு
ஏரியின் மதகு பழுது அடைந்ததால் வீணாகும் நீரால் பாசனத்திற்கு பாதிப்பு அடைந்து வருகிறது
By : King 24x7 Website
Update: 2023-12-04 16:10 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள அருங்குணம் ஊராட்சியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 323 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதில், 900 ஏக்கர் பாசன பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக, ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ளது. ஏரியில் உள்ள மதகு பழுதடைந்துள்ளதால், மதகு வழியாக வெளியேறும் தண்ணீரை தடுக்கும் வகையில், அப்பகுதி விவசாயிகள் தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு அடைத்துள்ளனர். அதையும் மீறி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதே நிலையில் தண்ணீர் வெளியேறினால், விவசாய பாசனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, உடனடியாக தண்ணீர் வெளியேறுவதை தடுத்து, அடுத்த ஆண்டு புதிய மதகு கட்டித் தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.