2500 ஏக்கர் மக்காச்சோள பயிர் பாதிப்பு - இழப்பீடு வழங்க கோரிக்கை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது லத்துவாடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 2500 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தோம் அதற்கு பூச்சிக்கொல்லி மருந்து என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நன்கு வளர்ந்த நிலையில் மழை இல்லாததாலும் நீர் இல்லாததாலும் 2500 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் கருகியது.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. இது குறித்து வேளாண்மை துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவித்து இருந்தோம் ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியை வந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.