மழையால் பயிர்கள் சேதம் - எம்.எல்.ஏ கருமாணிக்கம் ஆய்வு

ராமநாதபுரம் திருவாடானை சுற்றுவட்டார பகுதியில் மழையால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-24 04:00 GMT

எம்.எல்.ஏ ஆய்வு 

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா திகழ்கிறது. அந்த அளவிற்கு 26 ஆயிரத்து 650 ஹெக்டேர் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக விளைச்சலுக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது.ஒரு படி நெல் கூட தேராதா அவல நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்டடுள்ளது.

இந்நிலையில மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிலவற்றை முதற்கட்டமாக திருவாடானை தொகுதி சட்டமன்றத் உறுப்பினர் கருமாணிக்கம்  ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார், மற்ற்றும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் பாதிப்பையும், வயல்களில் தேங்கியிருக்கும் உபரி நீரை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டார். இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கூறுகையில் விவசாயம் தாலுகா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு பற்றி விவரங்களை திருவாடனை தாலுகா முழுவதும் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.  வேளாண் அதிகாரி கருப்பையா, வட்டாடா வளர்ச்சி அலுவலர் கோட்டை, திமுக ஒன்றிய செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கணேசன். நகர்தலைவர் செந்தில்குமார், காங்கிரஸ் நிர்வாகி மகாலிங்கம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News