வைகையாற்றில் குப்பைகளை கொட்டுவதால் மரக்கன்றுகள் சேதம்
மானாமதுரை வைகையாற்றில் குப்பைகளை கொட்டுவதால் மரக்கன்றுகள் சேதமடைவதாக மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 15:48 GMT
மரக்கன்றுகள் நடல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் நமது பசுமை பணி குழு நண்பர்கள் மற்றும் ஹார்ட் ஃபுல் நெஸ் பண்பாளர்கள் இணைந்து மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை மரக்கன்றுகளின் மீது கொட்டுவதால் மரக்கன்றுகள் சேதம் அடைவதாகவும், குப்பைகளை முறையான இடங்களில் கொட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்