கையகப்படுத்தபட்ட நிலங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டையில் மின் கோபுரம் அமைக்க விவசாய இடத்தை கையகப்படுத்தியவர்கள் உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்தும், மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாய பெருங்குடி மக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-02-06 04:22 GMT
ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலக்கோட்டை தாலுகா கிராமபுற விவசாய பெருங்குடி மக்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோரிக்கை மனுக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் . விவசாயிகளின் நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை கைப்பற்றினர். இதற்கு உரிய இழப்பீடு தற்போது வரை வழங்காதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.