ஊரக வளர்ச்சி துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சத்துணவு மையங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப கோரியும் மக்கள் நல பணியாளர்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக பணிகளை அளிக்க கோரியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்;
Update: 2023-12-24 11:13 GMT
ஊரக வளர்ச்சி துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித் துறை, வாலாஜாபாத் வட்ட கிளை துணை தலைவர் ஜெகஜீவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழகம் முழுதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், உதவியாளர், சமையலர் ஆகிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு, ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணிகளை வழங்கி, குழு காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது