டெங்கு கொசு உற்பத்தி: பெட்ரோல் பங்கிற்கு அபராதம்

குழித்துறை மற்றும் மார்த்தாண்டத்தில் டெங்கு கொசு உற்பத்தி செய்த தனியார் அலுவலகம் பெட்ரோல் பம்பு ஆகியவற்றிற்கு 4000 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-06-06 16:10 GMT

அதிகாரிகள் ஆய்வு 

பருவமழை காரணமாக குழித்துறை நகராட்சி உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது,அதன் அடிப்படையில் இன்று குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் ஆணையர் அவர்களின் ஆணையின் படி சுகாதார ஆய்வாளர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது தனியார் அலுவலகம் மற்றும் பெட்ரோல் பம்பில் கொசு புழுக்கள் அதிகமாக இருப்பதனை கண்டறியப்பட்டு ரூ .4000/- அபராதம் விதிக்கப்பட்டது‌.

மேலும் பொது மக்கள் தங்களது வீட்டின் வளாகம் மற்றும் அலுவலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசுப்புழு வளரும் காரணிகளை அகற்றி அனைவரும் நகராட்சியுடன் இணைந்து டெங்கு நோய் பரவலை தடுக்க ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இது போன்று கொசு புழுக்கள் இருப்பதனை கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News