காலிமனையில் தேங்கும் கழிவுநீரால் டெங்கு அபாயம்
ஸ்ரீபெரும்புதூரில் காலிமனையில் கழிவுநீர், குப்பை கழிவுகள் மாதக்கணக்கில் தேங்கியுள்ளதால் டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பட்டுநுால் சத்திரம் சரளா நகரில் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. தவிர, ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் உள்ளிட்ட சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும், ஏராளமான ஊழியர்கள் இங்கு வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இங்குள்ள அன்னை மருந்தகம் அருகில், குடியிருப்புக ளின் மத்தியில் காலிமனை உள்ளது. இதில், அப்பகுதி மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை காலிமனையில் விடுகின்றனர். அதேபோல், மழை பொழியும் போது, காலி மனையில் தேங்கியுள்ள கழிவுநீர், குப்பை கழிவுகளுடன் மழைநீர் கலந்து மாதக்கணக்கில் தேங்குகிறது.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கடி தொல்லையில் அப்பகுதி யினர் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அச்சத்தில் உள்ளனர்.