சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
சேலம் மாநகர துணை கமிஷனராக (தலைமையகம்) பணியாற்றிய சந்திரமவுலி கடந்த மாதம் ஓய்வு பெற்றதைத் அடுத்து, புதிய துணை கமிஷனராக ராஜேந்திரன் இன்று காலை பொறுப்பேற்றார்.
சேலம் மாநகர தலைமை இடத்து துணை கமிஷனராக பணியாற்றி வந்தவர் சந்திரமவுலி. இவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனராக (தலைமையகம்) ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். இவர் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியிடம் வாழ்த்து பெற்றார்.
தலைமை இடத்து துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜேந்திரனுக்கு சேலம் மாநகரத்தில் உள்ள உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். துணை கமிஷனர் ராஜேந்திரன் திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்ஸ்பெக்டராகவும், நாமக்கல் , கிருஷ்ணகிரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் டி.எஸ்.பி.யாகவும், ஏ.டி.எஸ்.பி.யாக தேனி, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியிலும் பணியாற்றி உள்ளார். தற்போது பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.