காடையாம்பட்டி அருகே வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்
காடையாம்பட்டி அருகே ரூ.1.10கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள காருவள்ளி,கொங்குப்பட்டி ஊராட்சிகளில் சுமார் ஒரு கோடியே 10லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கும் விழா காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சித்தேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் காருவள்ளி ஊராட்சியில்பெரும்பள்ளம், பாண்டியன்காடு சுடுகாடு வரை தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் கொங்குப்பட்டி ஊராட்சி மூங்கிலேரிப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் சுமார் ஒரு கோடி 10லட்சம் மதிப்பீட்டில் தொடங்கும் கட்டுமான பணிகளை சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும்,
ஓமலூர் சட்டமன்ற உறுப்பினருமான மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், காருவள்ளி ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் சத்தியவாணி சந்தானம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.