தீர்த்தமலை திருக்கோவில் கட்டுமான பணிக்கு கல் சுமந்து சென்ற பக்தர்கள்.

தீர்த்தமலை திருக்கோவிலுக்கு வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்த பகதர்கள் கோவில் கட்டுமான பணிக்கான கட்டுமான பொருட்களை அடிவாரத்தில் இருந்து எடுத்து வந்து மலையில் சேர்த்தனர்.

Update: 2023-10-30 01:41 GMT

செங்கற்களை சுமந்து வந்த பக்தர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தருமபுரி மாவட்டம் அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில் மலையின் மீது அமைந்துள்ளது . பக்தர்கள் மலையில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் படிக்கட்டுகளில் நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு பணிக்காக கட்டுமான பணிகள் கோவில் கோபுரங்கள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை பௌர்ணமி தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீர்த்த மலைக்கு வந்திருந்தனர் . கட்டுமான பணிக்காக மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கற்களைப் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று மலை உச்சியில் உள்ள கோவிலில் சேர்த்தனர் . கோவில் கட்டுமான பணிக்கு தங்களால் ஆன சிறு உதவி கல் சுமந்து செல்வது இதனை ஈசனுக்கு செய்யும் தொண்டாக நினைத்து மகிழ்ச்சி கொள்வதாகப் பக்தர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். மலையில் உள்ள ராமர் தீர்த்தம். அக்னி தீர்த்தம்,கௌரி தீர்த்தம். உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்
Tags:    

Similar News