அண்ணாமலையார் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

Update: 2023-11-13 14:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலக நன்மைக்காகவும ,சிவனுடைய புகழும் கிரிவலத்தின் நன்மைகள் குறித்தும் நடனம் ஆடி வந்து அஷ்ட லிங்கத்தின் முன்பு தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள் .. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

இந்நிலையில் உலக நன்மைக்காகவும் சிவனுடைய பெருமையை குறித்தும் தனிமனிதன் ஒழுக்கத்தை குறித்தும் அனைவரும் தியானம் செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் பரதநாட்டியம் ஆடினார்.

அதன் பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள எமலிங்கம் வருண லிங்கம் வாயு லிங்கம் குபேர லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களும் முன்பும் இரவு முழுவதும் பரதநாட்டியம் ஆடியும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர் இந்த பரதநாட்டியத்தில்ஆந்திரா,கர்நாடகா,தெலுங்கானா,தமிழ்நாடு ஆகிய மாநிலத்தில் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பக்தர்கள் இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி பங்கேற்றனர் மேலும் இந்த பரதநாட்டை கண்டு ஆன்மீக பக்தர்கள் மெய் சிலிக்க வைத்தது

Tags:    

Similar News