பழனி மலை போல் மலையமைத்து முருகருக்கு பூஜை செய்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சங்ககிரி அருகே பழனி மலை போல் மலையமைத்து முருகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-25 16:25 GMT
சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி காந்திநகர் பகுதி அய்யனாரப்பன் கோவில் வளாகப் பகுதியில் பழனி மலை போல் மலை அமைத்து பழனியாண்டவருக்கு பால்,தயிர்,சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அரோகரா கோஷமிட்டு தைப்பூச விழாவை விமர்சையாக கொண்டாடினர்.

Tags:    

Similar News