தருமை ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில் பணி நீக்கம்

தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளரான செந்தில் மார்ச் 22ம்தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தருமபுர ஆதீனத்தின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-11 03:02 GMT

தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளரான செந்தில் மார்ச் 22ம்தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தருமபுர ஆதீனத்தின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறை தருமை ஆதீனத்தின் 27-வது ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக கூறி கொலை முயற்சியில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸார் தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், செம்பனார்கோவில்ய குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ், திருக்கடையூர் விஜயகுமார், செங்கல்பட்டு அதிமுக வழக்கறிஞர் பிரிவு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக வினோத், விக்னேஷ், ஶ்ரீநிவாஸ், குடியரசு ஆகிய 4 பேரை சிறப்பு போலீசார் கைது செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். அப்போது காசி ஞானரத யாத்திரையில் இருந்த தருமபுர ஆதீனத்துடன் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில் உடனிருந்தார்.

செந்தில் ஆதீனத்துடன் காசியில் இருக்கும் புகைப்படங்கள் ஆதீனத்தின் முகநூல் பக்கத்தில் வெளிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை போலீசார் கைது செய்து கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பலமுறை மனு தாக்கல் செய்தபோது குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாததால் ஜாமின் வழங்க காவல்துறை ஆட்சேபம் தெரிவித்ததால் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய உள்ளுரிலேயே சுற்றி வரும் குற்றவாளிகளை கைது செய்யாமல் மயிலாடுதுறை போலீசார் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக இந்து முண்ணனி மற்றும் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தருமபுரம் ஆதீனகர்த்தரின் உதவியாளராக பணிபுரிந்த திருவையாறு செந்தில் கடந்த மார்ச்l 22-ஆம் தேதி முதல் பணி ஒழுங்கீனம் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவருடன் ஆதீனம் மற்றும் ஆதீனக் கோயில்கள் குறித்து யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தருமை பொதுமேலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News