புதிய பாலம் அமையும் பகுதியினை எம்பி ஆய்வு

தொப்பூர் கட்டமேடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் எல்லை பகுதி வரை சுமார் 6. 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து மேம்பாலம் அமையக்கூடிய பகுதிகளை தருமபுரி எம்பி ஆய்வு செய்தார்

Update: 2024-02-28 04:52 GMT
தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கக்கூடிய மிக முக்கியமான சாலை. இச்சாலையில் 8 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி மற்றும் வளைவுகளான சாலையில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுவதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு மரணச்சாலையாக மாறி உள்ளது. இந்த கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் அதற்கான நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து எம்பி நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும், இது தொடர்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் அப்பகுதியில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க அனுமதி அளித்தது. இதில் தொப்பூர் கட்டமேடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் எல்லை பகுதி வரை சுமார் 6. 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து மேம்பாலம் அமையக்கூடிய பகுதிகளை இன்று தருமபுரி எம்பி செந்தில்குமார் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட பாலம் அமையவுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News