தர்மபுரி : ரூ.22 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் நடந்த ஏலத்தில் ரூ.22 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Update: 2024-03-19 03:26 GMT

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களானஈரோடு, கரூர்,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக பட்டுக்கூடு ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் தாங்கள் கொண்டுவரும் பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் இந்த ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் பணப்பட்டு வாடா உடனடியாக செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை 78 விவசாயிகள் 5,376 கிலோ வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதிக பட்சமாக ஒரு கிலோ 491 ரூபாய்க்கும்,குறைந்த பட்சமாக 271 ரூபாய்க்கும்,சராசரியான பட்டுக்கூடுகள் 413 ரூபாய்க்கும், பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு நேற்று ஒரே நாளில் 22, 21,676 ரூபாய்க்கு ஏலம் போனது.

Tags:    

Similar News