தூதை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Update: 2023-12-12 01:23 GMT
சிவகங்கை மாவட்டம், தூதை பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பாதையில் இரண்டு முறை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் அப்பகுதிக்கு பட்டா உள்ளதாக தெரிவித்து கல்லுக்காலை ஊன்றி தடை செய்துள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தனி நபர் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கடந்த வாரம் தூதை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று அக்கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்