கவனத்தை திசை திருப்பி ஆசிரியையிடம் நகை பறிப்பு
அஸ்தம்பட்டியில் பேருந்தில் காசு கிடப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
Update: 2024-02-21 03:17 GMT
நகை பறிப்பு
சேலம் கன்னங்குறிச்சி அருகே சுப்புராயன் தெருவைச் சேர்ந்தவர் சுவர்ணகுமாரி (வயது 68). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், சம்பவத்தன்று சாய்பாபா கோவில் செல்வதற்காக கன்னங்குறிச்சியில் இருந்து அஸ்தம்பட்டிக்கும், அஸ்தம்பட்டியில் இருந்து சட்டக்கல்லூரி வரை பஸ்சில் சென்று கோவிலுக்கு சென்று பார்த்தபோது கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கசங்கிலியை காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெண்கள் கோரிமேட்டில் சுவர்ணகுமாரி அருகில் நெருங்கிய நின்றதாகவும், கீழே காசு கிடப்பதாக கூறி சுவர்ணபுரி கவனத்தை திசை திருப்பியதுடன் அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.