திருவாரூர் : சமத்துவ சுடுகாட்டினை மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு
பழுதடைந்த சுடுகாட்டை சரிசெய்ய வேண்டி ஆய்வை மேற்கோண்டனர்;
Update: 2023-12-23 04:58 GMT
சமத்துவ சுடுகாட்டினை மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு
திருவாரூர் அருகே வைப்பூர் ஊராட்சியில் பழுதடைந்துள்ள சமத்துவ சுடுகாட்டினை மேம்படுத்துவதற்கான பணிக்காக மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருவாரூர் திமுக ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஒன்றிய குழு உறுப்பினர் குணசேகரன் ,மைய கமிட்டி செயலாளர் ரவி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் சரவணன் ,கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.