தீபாவளி : நாமக்கல் நகரில் 5 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகராட்சியில் 5 டன் எடையுள்ள பட்டாசு குப்பைகளை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அகற்றினர்.

Update: 2023-11-14 00:52 GMT

குப்பைகள் அகற்றும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. நகராட்சிப் பகுதியில் உள்ள 55 ஆயிரம் வீடுகளில், மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அனைத்து வீடுகளிலும், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி காலை நேரித்தில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து, சேந்தமங்கலம் ரோடு, முதலைப்பட்டி, கொசவம்பட்டி பகுதிகளில் உள்ள கம்போஸ்ட் உரத்தயாரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இங்குள்ள நுண்ணுயிர் செயலாக்கும் மையங்களில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில்,  நாமக்கல் நகராட்சி பகுதியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் ஏராளமான பட்டாசுகளை வெடித்து குதூகலமாக கொண்டாடினர். இதனால் நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் ரோடுகளில் பட்டாசு குப்பைகள் மலைபோல் குவிந்தன. இவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி, வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று நகராட்சி கம்போஸ்ட் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் நகராட்சியில் தினசரி சுமார் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, நகராட்சி குப்பை கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நகராட்சி பகுதியில், பொதுமக்கள் அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால், கூடுதலாக 5 டன் பட்டாசு குப்பைகள் சேகரிக்கப்பட்டன. ஏற்கனவே சேகரிக்கப்படும் 50 டன் குப்பைகளுடன் சேர்த்து, மொத்தமாக 55 டன் குப்பைகள் தூய்மைப்பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு நகராட்சி கம்போஸ்ட் உரக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Tags:    

Similar News