தி.மு.க. சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
சேலம் மத்திய மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் மாளிகை முன்பு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-31 12:01 GMT
மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
சேலம் மத்திய மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் மாளிகை முன்பு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., (மத்திய), டி.எம்.செல்வகணபதி (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத போதகர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.டி.மணி, மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர் தினகரன், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, தனசேகர், பிரகாஷ், முருகன், ஜெகதீஷ், தமிழரசன், கேபிள் ராஜா, மோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் டாக்டர் தருண், மாநகர அமைப்பாளர் கேபிள் சரவணன், ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், அவை தலைவர் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.