திருநாவுக்கரசரை தடுத்த திமுக!

அரசியல் செய்திகள்

Update: 2024-03-31 15:54 GMT

திருச்சி நாடாளுமன்றஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா

திருச்சி நாடாளுமன்றஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையாவிற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். தமிழகத்தில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு தற்பொழுது வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை நகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை இன்று இரவு ராம் தியேட்டர் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கருக்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசு திமுக சதியால் தற்பொழுது சீட் மறுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம் ஆனால் எங்கள் கட்சியில் சார்பில் கூட்டணி வைத்துள்ளோம் எஸ்டிபிஐ கட்சியினருக்கு அவர்கள் கேட்ட தொகுதியை கொடுத்துள்ளோம் ஆனால் மதிமுக கேட்ட தொகுதி கொடுக்காமல் வேண்டுமென்றே திமுக திருச்சி தொகுதியை கொடுத்து பழிவாங்கி விட்டார்கள் என தெரிவித்தார்.
Tags:    

Similar News