திமுக வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு
திமுக வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு.;
Update: 2024-04-03 11:30 GMT
வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மேல்பாலூர் ஊராட்சி சார்பில் திருவண்ணாமலை லோக்சபா திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை ஆதரித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் எம்எல்ஏ நேற்று வாக்கு சேகரித்தனர். அப்போது கலசப்பாக்கம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாணவர் அணி துணை அமைப்பாளரும் திமுக கட்சியின் கிளைக் கழக செயலாளருமான மு. சுரேஷ் சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் சி.என். அண்ணாதுரைக்கும் , பெ.சு.தி சரவணன் எம்எல்ஏவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து உற்சாகமாக வரவேற்றனர் உடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்ரமணியம் , சிவகுமார் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகளும் பலர் பங்கேற்றனர்