திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு
லால்குடி அருகே பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு தலைமையில் திமுக நிர்வாகிகள் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
Update: 2024-04-09 08:00 GMT
திமுக மற்றும் தோழமைக் கூட்டணி கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து புள்ளம்பாடி அருகே கல்லகம் ஊராட்சியில் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு மற்றும் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் , கூட்டணி கட்சியி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.