வாசுதேவநல்லூரில் திமுக அலுவலகம் திறப்பு
வாசுதேவநல்லூரில் திமுக அலுவலகத்தை எம்எல்ஏ ராஜா திறந்து வைத்தார்.
Update: 2024-01-04 06:49 GMT
தென்காசி வடக்கு மாவட்ட வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக அலுவலகத்தை தென்காசி மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் பூசைபாண்டியன் முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட பொருளாளர் சரவணன் .மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், வாசு பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.