டிரைவர் மரணத்தில் சந்தேகம் - கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்.

Update: 2023-11-24 03:04 GMT
இறந்தவர் உறவினர்கள் போராட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (43). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டார். சில மணி நேரத்திற்கு பிறகு சுந்தர்ராஜ் உடல்நல குறைவால் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம்  சுந்தர்ராஜ் சிகிச்சை பலனின்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி  ஆஸ்பத்திரியில்  உயிரிழந்தார். இதனால் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக சுந்தர்ராஜன் குடும்பத்தினர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு இரவில்  போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று காலை வரை நீடித்தது.         பின்னர் மீண்டும் மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து சுந்தர்ராஜன் குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், இறந்த சுந்தர்ராஜின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கை விட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News