பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; உல்லாச வீடியோ வெளியிடுவதாக கணவன் மிரட்டல்

ஆரணி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்த கணவன், அவருடன் உல்லாச இருந்த வீடியோவை வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2023-12-14 15:30 GMT

 ஆரணி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்த கணவன், அவருடன் உல்லாச இருந்த வீடியோவை வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற ராணுவ வீரர் சங்கர் என்பவரின் மகள் நித்தியாவும், கண்ணமங்கலம் அருகேகீழ்வல்லம் கிராமத்தை சேர்ந்த மேகநாதனும் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெஸ்மிதா (9) தமிழ்மிதா(6) என்ற 2 மகள்கள் உள்ளனர். மேலும் மேகநாதன் எப்போதும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதாகவும் இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து நித்தியா தனது மாமியார் ராஜேஸ்வரியிடம் கூறியதற்கு வரதட்சணையை லாரியில் கொண்டு வந்தாயா என்று தகாதவார்த்தைகளால் பேசி மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நித்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது 2 மகளுடன் சிறுமூர் கிராமத்தில் உள்ள பாட்டி சாந்தாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகநாதன் தனது மனைவியிடம் சிறுமூர் கிராமத்திற்கு நேரில் மற்றும் வீடியோ காலில் ஆபாசமாக திட்டியும் என்னுடன் குடும்ப நடத்த வருமாறும் வரதட்சணையாக 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை தாய் வீட்டில் சீதனமாக வாங்கி கொண்டு வருமாறு இல்லையென்றால் கணவன் மனைவியாக வாழ்ந்தபோது உல்லாசமாக இருந்த வீடியோவை உறவினர்கள் மற்றும் சமூக வளைதலங்களில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டியாக கூறி நித்தியா ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மேகநாதன் மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆரணி அருகே வரதட்சணை கேட்டு உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளைதலங்களில் போடுவதாக மிரட்டிய கணவன் மற்றும் உடந்தையாக செயல்பட்ட மாமியார் மீது வழக்கு பதியபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Tags:    

Similar News