விஎம்எஸ் நகரில் குடிநீர் பிரச்சனை : மேயர் ஜெகன் ஆய்வு!
தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
Update: 2024-05-26 02:30 GMT
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி.எம்.எஸ் நகர் பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என்று மேயரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக அந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார். மேலும், முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரட்டார். ஆய்வின் போது திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மரிய அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.